
"எங்கள் நோக்கு"
''மக்கள் விருப்புக்கமைந்த திறனமயான அரச சேவை''
எங்கள் செயற்பாடு
''அரசின் குறிக் கோள்கறநறுக்கு அமைய சேவைகளை வழங்குதல், வள ஒருங்கணைப்பு, மற்றும் மக்கள் பங்களிப்புடனான திறனமயான நிலையான திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளி னூடாக, பிரதேச மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துதல்''
எங்களைப் பற்றி
பன்னல பிரதேசச் செயலாளர் பிரிவு வடமேல் மாகாணத்தன் குருனாகல் மாவட்டத்திள் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இது மாவட்டத்திள் பிரதேசச் செயலாளர் பிரிவுகளுடள் ஒப்பிட்டுக் கருத்திற் கொள்ளும்போது, பெரியதொரு நிருவாகப் பிரிவு என அற்முகப் படுத்த முடியும்.
275 ச. கிலோ மீற்றர் பரப்புடைய இப் பிரதேசச் செயலாளர் பிரிவு கட்டுகம்பள தேர்தல் தொகுதி எனப் படுவதுடன் உள்ளூராட்சி அடிப்படையில் பன்னல பிரதேச சபைப் பிரிவு எனலாம் அது ஹமங்கல்ல, யக்வில, மாக்கந்துர எனும் 03 உப காரியாலயங்களாகப் பிரித்துல் பரிபாலனம் செய்யப்படுகின்றது, அவ்வாறே இப் பிரதேச சபைப் பிரிவும் கிழக்குக் கோரளை, மேற்குக் கோரளை, பிட்டிகள் கோரளை என 03 கோரளை களாகப் பிரிக்கப் பட்டுள்ளன.
பிரதான நகரப் புறத்தைச் சூழ மக்கள் நெருக்கமாகவும், ஒன்றிணைநநதும் வாழ்வதுடன், இப் பிரிவின் பெரும்பாலோர் சிங்கள பௌத்தர்களாகவும், தமிழுர்கர், முஸ்லிம்கள், பறங்கியர்கள் சிறுபான்மையினராகவும் வாழ்கின்றர். இப் பிரதேசத்திள் சனத்தொகை 133738 ஆகும்.
கிரியுள்ள , பன்னல எனும் இரு பொலிஸ் பிரிவுகளும் , அதில் பன்னல பொலிஸ் பிரிவுக்கு 63 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் , கிரியுள்ள பொலிஸ் பிரிவில் 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் அடங்குகின்றன.
ஆரம்பத்தில் இது குளியாப்பிட்டிப் பிரதேசச் செயலாளர் பிரிவிலிரிந்து பிரிந்து ஒரு உப காரியாலயமாகஇயங்கி வந்ததுடன் 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளாகவும் இயங்கி வந்துள்ளக. 1976 இல் இது ஒரு உப மாகாணாதிபதி காரியாலயமாக அமைந்ததுடன் , 1990 இல் 87 கிராம அதிகாரிப் பிரிவுகள் கொண்ட ஒரு பிரதேச மகா செயலாளர் பிரிவாக உருப்பெற்றது.
பூகோள அமைப்பு
பன்னல பிரதேசச் செயலாளர் பிரிவு , இயற்கை அமைப்பு 1:63360 பரிமாண வரை படத்தில் கிழக்குத் தேசாந்தரம் 230-250 பாகைகளுக் கிடையிலும் , வட அட்சம் 100-140 பாகைகளுக்கிடையிலும் அமைந்துள்ளது. கிராம உத்தியோகத்தர் பிரிவுகல் 87உம் கிராமங்கள் 205 உம் கொண்ட பன்னல பிரதேசச் செயலாளர் பிரிவு பன்னல நகரத்தைக் கேந்திர நகரமாகவும் , கிரியுள்ள , மாக்கந்துர நகரங்களை உப நகரங்களாகவும் கொண்டுள்ளது.
பன்னல பிரதேசச் செயலாளர் பிரிவின் கிழக்கு எல்லையாக குருனாகல் - நீர்கொழும்பு பிரதான பாதையிள் 19ம் மைல் கல்லைத் தாண்டியதும் சந்திக்கும் மாஹரகம பாலம் கணிக்கப் படுகின்றது. கிழக்கி வருந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து செல்லும் மஹாஒயா இப் பிரிவின் தெற்கு எல்லையாகும் . இதள் எல்லை ஹெமுடாவகம ஆகும். கிழக்கு எல்லை படிப் படியாக வடக்குத் திசையாக அகள்று செள்று , குளியாப்பிட்டிப் பிரதேசச் செயலாளர் பிரிவின் தெற்கு எல்லை வரைபரந்துள்ளது. இப் பிரிவின் மேற்கு எல்லை லங்ஸிகொடல்ல , சிங்கக்குளிய , ஹெட்டிரிப்புவ , மல்லவ ஆதியாம் கிராமங்களிக்கூடாக வட எல்லை வரை விரிந்து செல்கிறது. வட எல்லை ஹுந்திராபொள , ராவிட்ட , கல்லஹமுள்ள மற்றும் நாம்பிரித்தங்கடவர ஆகிய கிராமங்கலை உள்ளடக்கியதாய் கட்டுக்கம்பள கிராமம் வரை செல்கிறது.
இப் பிரிவின் வடக்குத் திசையாக குளியாப்பிட்டி கிழக்கு மற்றும் குளியாப்பிட்டி மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகள் சந்திக்கின்றன. தெற்கு எல்லையான மகா ஓயாவுக்கு அப்பால் திவுளப்பிட்டி மற்றும் மீரிகம பிரதேசச் செயலாளர் பிரிவுகள் அமைந்துள்ளன. கிழக்குத் திசையாய் நாரம்மல பிரதேசச் செயலாளர் பிரிவும் , மேற்குத் திசையாய் தங்கொட்டுவ பிரதேசச் செயலாளர் பிரிவும் அமைந்துள்ளன.
வரலாற்று விவரங்கள்
பன்னல நகரின் வரலாற்றுப் பின்னணியை நோக்கும்போது மக்கள் வாயிலாகப் பேசப்படும் பல கூற்றுக்கள் காணப் படுகின்றன. போர்த்துக்கேய ஆட்சிக் காலத்தில் , தற்போது பன்னல என அழைக்கப்படும் கடத்தில் போர்த்துக்கேய முகாம்கள் அமைந்திருந்ததாகப் பேசப்படுகின்றது. அவர்கள் முகாம் அமைத்திருந்த இடங்களி விருந்து துரத்தியடிக்கப்பட்ட போது , இவ்விடம் ''பன்னல'' என அழைக்கப்பட்டதாகப் பேசப்படுகின்றது.
அவ்வாறே இற்றைக்கு நூற்றுக் கணக்கான வருடங்களுக்கு முன்பு , தற்போது பன்னல என வழங்கப்படும் நிலப் பரப்பு பாழடைந்து நிலப் பரப்பாக இருந்ததாகவும் , அதில் கிழங்குகளை யுடைய ஒருவகையான பன் பற்றைகள் செறிந்து காணப் பட்டதாகவும் , அதன் காரணமாக ''பன் - அள'' எள அழைக்கப்பட்ட இந் நிலப்பரப்பு காலப் போக்கில் ''பன்னல'' எள அழைக்கப் படலானது என மற்றும் ஒரு வரலாறும் பேசப் படுகின்றது.
அவ்வாறை பன்னல பிரதேசச் செயலாளர் பிரிவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம். அவையாவள ,
- மத்தேபொள புராண விகாரை
- வணமந்தாவ புராண விகாரை
- போபிட்டிய ஸ்ரீ சுதர்ஷணாராமய
- வத்தேகெதர முறுதங்கே கணுகள விகாரை
- கொட்டுலல்ல அம்பலம்
















